ஆதாரம்

AdSenseஸுக்காக உங்கள் வலைதளத்தை எவ்வாறு சிறப்பாக வடிவமைக்கலாம்?

ஆதாரப் படம்
விளம்பர மேம்பாடுகள்

உங்கள் AdSense வருவாயை அதிகரிக்க வேண்டுமா? AdSense மூலம் பணம் சம்பாதிக்க, உங்கள் வலைதளத்தில் சிறந்த வடிவமைப்பைப் பெற உதவும் இந்த 4 உதவிக்குறிப்புகளைப் பாருங்கள்.

Google AdSense மூலம் பணம் சம்பாதிப்பதற்கு உங்கள் வலைதளத்தின் தளவமைப்பு மிகவும் முக்கியமானது. எதையும் கிளிக் செய்வதற்கு முன்னரே வருகையாளர்கள் வெளியேறும் வகையில் உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாத அளவிற்கு விளம்பரங்கள் இருப்பது பலன் தராது. அதே சமயத்தில் உங்கள் விளம்பரங்களைக் கவனிக்காமல் கடந்துபோய்விடும் வகையிலான இடத்தில் காட்டுவதும் பலன் தராது. இதனால்தான் உங்கள் வலைதளத்திற்கு AdSense மேம்படுத்ததுதல் முக்கியமாகிறது. இதைச் செய்வதற்கான Google AdSense உதவிக்குறிப்புகள் சில இங்குள்ளன.

1. லீடர்போர்டு பேனருக்கான இடத்தை உருவாக்குங்கள்.

பெரிய கிராஃபிக் உள்ளடக்கத்தைப் பக்கத்தின் மேற்புறம் காட்சிப்படுத்துவது வலைதளத்தின் பார்வையாளர்களை அதிகமாக ஈர்க்கும். AdSense வருவாயை மேம்படுத்த விரும்புகின்ற பெரும்பாலான வலைதளங்கள் 728 பிக்சல்கள் அகலமும் 90 பிக்சல்கள் உயரமும் கொண்ட லீடர்போர்டு பேனரைப் பயன்படுத்துகின்றன. இன்னும் பெரிய அளவிலான பேனரைப் பயன்படுத்துகின்ற வலைதளங்களும் உண்டு.

பார்வையாளர்களின் கவனத்தை ஈர்ப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் வலைதளத்திற்கான மதிப்பின் அடையாளமாகவும் இந்த லீடர்போர்டு பேனர் இருக்கும். வலைதளத்தில் இருந்து லாபம் பெறுவதற்காக Time போன்ற பத்திரிகை வெளியீட்டாளர்கள் தங்களின் வலைதளத்தின் மேற்புறம் பெரிய விளம்பரங்களைப் பயன்படுத்துகின்றனர்.

ஆதாரம் உட்பொதிந்த படம்

Entrepreneur போன்ற பிற வெளியீட்டாளர்கள் சிலசமயங்களில் தங்களின் வலைதளத்தின் தலைப்புப் பகுதியின் கீழ் நிலையான லீடர்போர்டு பேனர்களைப் பயன்படுத்துகின்றனர்.

மேற்குறிப்பிட்ட இரண்டுமே பார்வையாளர்களின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதோடு உங்கள் உள்ளடக்கத்தையும் விரைவாக அணுகச் செய்து AdSense மூலம் வருவாய் பெற உதவும்.

2. செவ்வக அல்லது ஸ்கைஸ்கிராப்பர் பேனருடன் பக்கப்பட்டியை அமையுங்கள்.

அடுத்த Google AdSense உதவிக்குறிப்பு: உங்கள் வலைதளத்தில் கூடுதல் பேனர்களைச் சேர்க்கும் வகையில் ஒன்றிரண்டு பக்கப்பட்டிகளை அமைப்பது. ஏற்கனவே அமைக்கப்பட்ட அளவுகளில் செவ்வக அல்லது ஸ்கைஸ்கிராப்பர் பேனர்களைத் தேர்வு செய்யலாம் அல்லது உங்கள் பார்வையாளர்களின் திரைக்குப் பொருத்தமான அளவில் மாறிக்கொள்ளும் வகையிலான பேனர்களைத் தேர்வு செய்யலாம்.

AdSense மூலம் வலைதளத்தை மேம்படுத்துவதற்காக மட்டுமல்லாது, வலைதளத்தின் பார்வையாளர்கள் எவ்வாறு மின்னஞ்சல் அல்லது சமூக வலைதளங்கள் மூலமாக உங்களைப் பின்தொடரலாம் என்ற தகவலைக் காட்டுவதற்கும் பக்கப்பட்டிகளைப் பயன்படுத்தலாம். இது அவர்கள் வலைதளத்திற்கு மீண்டும் வருகைபுரிவதை உறுதிசெய்வதுடன், பல்வேறு விளம்பரங்களைக் கிளிக் செய்வதற்கான வாய்ப்பையும் அளிக்கும்.

3. முதன்மைத் தலைப்பின் கீழ் இணைப்பு யூனிட்களைச் சேருங்கள்.

கவனத்திற்கு: AdSense இணைப்பு யூனிட்களை வழிசெலுத்தல் மெனு போல அமைத்து பார்வையாளர்களைக் கிளிக் செய்ய வைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளக் கூடாது. வலைப்பதிவு மற்றும் செய்தி வலைதளங்களுக்கான உள்ளடக்கத்தின் முதன்மைத் தலைப்பின் கீழ் இணைப்பு யூனிட்கள் வழக்கமாக நன்றாகப் பொருந்தும். ஆனால் வழக்கமான இணைப்பு வண்ணம் அல்லது உங்கள் வலைதளத்தின் தீமுடன் பொருந்துகின்ற இணைப்பு வண்ணத்தைப் பயன்படுத்தினால் அவை தனித்துத் தோன்றும்.

4. உள்ளடக்கத்தின் நடுவிலோ கடைசியிலோ ஒரு கிடைமட்ட பேனரைச் சேருங்கள்.

உங்கள் வலைதளம் பார்வையாளர்களின் கவனத்தைப் பெறத் தொடங்கிய பிறகு இரண்டு இடங்களில் நீங்கள் கிடைமட்ட பேனர்களைச் சேர்க்கலாம். உள்ளடக்கத்தின் முடிவு வரை செல்வதற்கு வாய்ப்பில்லாத பட்சத்தில் (அதாவது, கலந்துரையாடல் அல்லது கருத்துப் பெட்டி போன்று) உள்ளடக்கத்தின் நடுவில் அதைச் சேருங்கள். எதிர்பாராத நேரத்தில் அது கவனத்தை ஈர்த்து உங்களுக்குக் கிளிக்கைப் பெற்றுத் தரலாம்.

நிறைய ஈடுபாட்டையும் கலந்துரையாடலையும் உங்கள் வலைதளம் பெறுகின்ற பட்சத்தில் அதை வலைப்பக்கத்தின் முடிவில் சேருங்கள். குறிப்பாக தங்களின் கருத்தை இடுகை செய்தபிறகு பார்வையாளர்கள் இருக்கக்கூடிய இடத்தில் சேருங்கள். உங்கள் வலைதளத்தை விட்டு வெளியேறும்போது அவர்கள் பெரும்பாலும் அந்த இடத்தில்தான் இருப்பார்கள். அடுத்து செல்வதற்கான ஒரு நல்ல இடத்தையும் இது அவர்களுக்குப் பரிந்துரைக்கலாம்.