ஆதாரம்
3 படிநிலைகளில் சிறந்த இணையதள உள்ளடக்கத்தை உருவாக்குதல்
உள்ளடக்க மார்க்கெட்டிங் உங்கள் இணையதளத்திற்குப் புதிய பயனர்களை ஈர்ப்பதோடு திரும்ப வருமாறும் அவர்களை ஊக்குவிக்கிறது. அதனால் இந்தப் பயனுள்ள கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
சிறந்த உள்ளடக்க மார்க்கெட்டிங் உங்கள் வலைதளத்திற்குப் புதிய பயனர்களை ஈர்ப்பதோடு முன்பு வருகை புரிந்தவர்கள் திரும்ப வருமாறும் ஊக்குவிக்கிறது. உள்ளடக்க உத்தி முக்கியமானது என்பதால் பின்வரும் பயனுள்ள கருவிகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
1. அதிகப் பயனர்களை ஈர்க்கக் கூடிய உள்ளடக்கத்தைக் கண்டறிதல்
எந்தவொரு புதிய வலைதள உள்ளடக்கத்தையும் உருவாக்குவதற்கு முன்பு வலைதளத்திற்கான பயனர்களின் ஆர்வங்களையும் உள்ளடக்க நுகர்வு சார்ந்த அவர்களின் நடத்தையையும் புரிந்துகொள்ளுங்கள். பயனர்களை அதிகத் திறனுடன் சென்றடையும் உள்ளடக்கத்தைக் கண்டறியுங்கள். உதாரணத்திற்கு: பயனர்களிடையே பெருமளவில் ஆர்வத்தையும் வினவல்களையும் தூண்டும் சில தனித்துவமான விஷயங்களைப் பற்றிய வலைதளங்கள் போதிய எண்ணிக்கையில் இல்லாமல் இருக்கலாம். இதுபோன்ற தளங்களை உருவாக்குவது பெரும்பாலும் உங்களைத் தனித்துத் தெரிய வைத்து நல்ல பலன் கொடுக்கும்.
- Google Trends மூலம் உலகம் முழுக்க உள்ள பயனர்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதைக் கண்டறியலாம். பல்வேறு பிராந்தியங்களிலும் மொழிகளிலும் Google Search மூலம் கிடைக்கும் சிறந்த தேடல் வினவல்கள் எந்த அளவிற்குப் பிரபலமாக உள்ளன என்பதை இது பகுப்பாய்வு செய்வதோடு வினவலின் தேடல் அளவை காலப்போக்கில் ஒப்பிட்டுப் பார்ப்பதற்கான வரைபடங்களையும் வழங்குகிறது. பிரபலமான தேடல் வினவல்களைக் கண்டறிந்து அவற்றுக்கான உள்ளடக்கத்தைத் தொடர்ந்து உருவாக்குங்கள். அல்லது ஏதாவது ஒரு தேடல் வார்த்தையை உள்ளிட்டு அதனுடன் தொடர்புடைய தலைப்புகளையும் வினவல்களையும் கண்டறியுங்கள். பயனர்கள் எதில் ஆர்வமாக இருக்கிறார்கள் என்பதை இந்தத் தொழில்நுட்பங்களின் மூலம் அறிந்துகொண்டு அதற்கேற்றவாறு உங்கள் உள்ளடக்கத்தை உருவாக்க முடியும்.
பயனுள்ள குறிப்பு
- Google Question Hub ஆன்லைனில் உள்ளடக்கம் தொடர்பான இடைவெளிகளைக் கண்டறியும்பொருட்டு பயனர்களுக்கு பதில் கிடைக்காத கேள்விகளை அவர்களிடமிருந்தே நேரடியாகச் சேகரிக்கிறது. பார்வையாளர்களுக்குச் சிறந்த உள்ளடக்கத்தை உருவாக்க இந்தப் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துங்கள்.
- Market Finder உங்கள் வணிகத்தை உலகளாவிய அளவில் வளர்ப்பதற்கான புதிய வாய்ப்புகளைக் காட்டுகிறது. உங்கள் தயாரிப்புகளும் சேவைகளும் உள்ளடக்கமும் எங்கு அதிகம் தேவைப்படும் என்பதை முன்னுரிமைப்படுத்த உதவும் மாதாந்திரத் தேடல்கள், பிரபலமான சந்தை நிலவரங்கள், தனிநபர் செலவழிக்கும் தொகை, நாடுவாரியாக உள்ள இணையப் பயனர்களின் எண்ணிக்கை ஆகியவற்றை இது பகுப்பாய்வு செய்கிறது. உங்கள் பிராண்டிற்கான புதிய இலக்கு மார்க்கெட்டுகளை உறுதிப்படுத்துவதற்கான இறுதிப்பட்டியலை உருவாக்கி உங்கள் வலைதள உள்ளடக்கம் சர்வதேசப் பயனர்களுக்குக் கிடைக்குமாறு செய்யுங்கள்.
- செய்திகளைப் படிப்பவர்கள் தொடர்பான புள்ளிவிவரங்கள் (News Consumer Insights - NCI) , தகுதிவாய்ந்த பயனர்களை எந்தவிதமான டிராஃபிக் மூலங்கள் ஈர்க்கின்றன, வலைதளத்தில் எவ்வாறு பயனர்களைச் சிறப்பாக ஈடுபடச் செய்வது ஆகியவை குறித்த பகுப்பாய்வை வழங்குகிறது. உதாரணமாக ஒரு பயனருக்கான வருகைகளின் எண்ணிக்கை அதிகமாக இருந்தும் குறிப்பிட்ட வருகையின்போது பயனர் படிக்கும் பக்கங்கள் குறைவாக இருப்பதாக NCI காட்டினால் உங்கள் வலைதளப் பக்கங்களுக்குள் ஒன்றை ஒன்று பரிந்துரைப்பதை மேலும் மேம்படுத்த வேண்டும் என்று அர்த்தம். கட்டுரைகளின் அடிப்பகுதியில் சிறந்த வரவேற்பைப் பெறுகின்ற உள்ளடக்கத்திற்கான இணைப்புகளைக் குறிப்பிட்டு அவற்றைக் கிளிக் செய்யும்படி வாசகர்களை ஊக்குவியுங்கள்.
மறந்துவிடாதீர்கள்
அனைத்து உள்ளடக்கமும் வலைநிர்வாகி தர வழிகாட்டுதல்களுக்கு இணங்க வேண்டும்.
2. உள்ளடக்க மார்க்கெட்டிங்கை மேம்படுத்துதல்
உங்கள் பார்வையாளர்கள் குறித்தும் வலைதளத்தின் மீது அவர்களுக்குள்ள ஈடுபாடு குறித்தும் அறிந்துகொள்ளுங்கள். இதன்மூலம் எந்த உத்தி நன்கு செயல்படுகிறது, எது செயல்படவில்லை என்பதை அறிந்துகொண்டு அதற்கேற்ப உள்ளடக்க உத்தியை மேம்படுத்தலாம். Google Analyticsஸில் உங்கள் பயனர்கள் குறித்த முழுமையான புள்ளிவிவரங்களை அறிந்துகொள்ளவும் செயல்திறனை மேலும் மேம்படுத்த வாய்ப்பு இருக்கும் பகுதிகளைக் கண்டறியவும் உதவும் பல்வேறு கருவிகள் கிடைக்கின்றன.
- நடத்தை அறிக்கைகள் உங்கள் வலைதளத்தின் ஒட்டுமொத்தப் பக்கங்கள், உள்ளடக்கம் ஆகியவற்றின் செயல்திறனை வெளிப்படுத்துகின்றன.
- நீங்கள் Search Consoleலையும் Google Analyticsஸையும் இணைப்பதன் மூலம் எந்த வினவல்கள் வலைதளத்திற்குப் பயனர்களை ஈர்க்கின்றன என்பதைக் கண்டறிந்து, அது தொடர்பான சிக்கல்களைச் சரிசெய்யவும், வலைதளத்தின் இம்ப்ரெஷன்கள், கிளிக்குகள், Google Searchசில் அதன் நிலை ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்யவும் முடிகிறது.
- செய்திகள் தொடர்பான நிகழ்நேரப் புள்ளிவிவரங்கள் (Realtime Content Insights - RCI) மூலம் பயனர்கள் மத்தியில் எந்தக் கட்டுரைகள் மிகவும் பிரபலமானவை என்பதையும் உங்கள் பிராந்தியத்தில் எந்த விதமான தலைப்புகள் பரவலாகப் பிரபலமடைந்து வருகின்றன என்பதையும் கண்டறியலாம்.
3. சமீபத்திய உதவிக்குறிப்புகளிலும் நிலவரங்களிலும் இருந்து பயனுள்ள தகவல்களை அறிதல்
பயனர்களின் இணையப் பயன்பாடு எவ்வாறு வளர்ந்து வருகிறது, பிற வணிகங்கள் அவர்களுக்கு எவ்வாறு பதிலளிக்கின்றன என்பவை உள்ளிட்ட விரிவான அம்சங்களைப் பார்க்கத் தவறாதீர்கள்.
- வாடிக்கையாளர் பாரோமீட்டர் மூலம் உலகெங்கிலும் வாழும் மக்கள் இணையத்தை எவ்வாறு, எப்போது, ஏன் பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம். ஆன்லைன் ஆய்வுகளையும் ஆவணங்களையும் தொடர்ந்து சேகரித்து வரும் இந்தத் தளத்தில், ஒவ்வொரு நாட்டிலும் வசிக்கும் வாடிக்கையாளர்கள் சாதனங்களை வாங்குவது தொடர்பான விருப்பத்தேர்வுகள் முதல் அவற்றை வாங்குவதற்கான முடிவை அவர்கள் எவ்வாறு எடுக்கிறார்கள் என்பது வரையிலான புள்ளிவிவரங்கள் அனைத்தும் கிடைக்கின்றன.
- வெற்றிக் கதைகள் பல்வேறு பிராந்தியங்களில் வாழும் சமூகங்களில் இருந்து உத்வேகத்தையும் யோசனைகளையும் வழங்குகின்றன. இவற்றின் மூலம் மற்ற நபர்கள் தங்களுக்குப் பிடித்த துறைகளில் ஈடுபட்டபடியே வருமானம் ஈட்ட AdSenseஸை எவ்வாறு பயன்படுத்துகிறார்கள் என்பதை அறிந்துகொள்ளலாம்.