ஆதாரம்

வலைதளத்தின் பயனர் அனுபவ (UX) உத்தியைத் துல்லியமாக்குவது எப்படி?

ஆதாரப் படம்
மேம்பட்ட உத்திகள்

குறைகள் இல்லாத இணையதள பயனர் அனுபவத்தை (UX) உருவாக்குவது மிகவும் முக்கியம். இணையதள அனுபவத்தைக் குறைக்கக்கூடிய எந்த விஷயத்தையும் சரிசெய்ய பயனர் அனுபவ (UX) உத்தி உங்களுக்கு உதவும்.

ஆதாரம் உட்பொதிந்த படம்

மேம்படுத்தப்பட்ட பயனர் அனுபவத்திற்கான வடிவமைப்பு

வலைதளத்தில் செயல்பாட்டு நிலைகளை இப்போது நீங்கள் அறிந்துகொண்ட நிலையில் அடுத்த கட்டமாக பயனர் அனுபவத்தை (UX) மேம்படுத்துவதற்கான உத்திகளைச் செயல்படுத்துவதில் பகுப்பாய்வைப் பயன்படுத்த வேண்டும். உங்கள் வலைதளப் பயனர்களுக்கு எளிதான, விரைவான பயனர் அனுபவத்தை வழங்க மூன்று மேம்பாட்டுக் கட்டமைப்புகளைப் பரிசீலிக்கலாம்.

  • AMP (Accelerated Mobile Pages) என்பது இணையப் பாகங்களின் கட்டமைப்பாகும். அனைத்துச் சாதனங்களிலும் தொடர்ந்து விரைவாகச் செயல்படும் அதிகச் செயல்திறன் கொண்ட வலைதளத்தை நீங்கள் உருவாக்க இது உதவுகிறது.
  • தானாகப் பொருந்தும் தன்மையுள்ள இணைய வடிவமைப்பு என்பது டெஸ்க்டாப்புகள், டேப்லெட்டுகள், மொபைல் ஃபோன்கள் உள்ளிட்ட அனைத்துச் சாதனங்களிலும் அழகாகத் தோற்றமளிப்பதற்காக, வலைதளம் தானாகவே அளவுகளை மாற்றிக்கொள்வதற்கும் சுருங்குவதற்கும் விரிவடைவதற்கும் HTMLலையும் CSSஸையும் பயன்படுத்துவதை அடிப்படையாகக் கொண்டதாகும்.
  • மேம்பட்ட இணைய ஆப்ஸ் என்பவை டெஸ்க்டாப்பிலும் மொபைல் சாதனத்திலும் நிறுவக்கூடியவையாக இருப்பதோடு ஆப்ஸால் வழங்கப்படும் அனுபவத்தையும் வழங்குகின்றன. இணையம் வழியாக நேரடியாகக் கட்டமைக்கப்பட்டு வழங்கப்படும் இணைய ஆப்ஸான இவை எந்தவொரு உலாவியிலும் விரைவாகவும் நம்பகமாகவும் செயல்படுகின்றன.

மொபைல் சாதனப் பயனர்களை மனதில் கொண்டு செயல்படுதல்

பெரும்பாலான பயனர்கள் இப்போது மொபைல் சாதனத்தின் மூலம் Google Searchசை அணுகுவதால் உங்கள் வலைதள உள்ளடக்கத்தின் மொபைல் பதிப்பே அட்டவணைப்படுத்தலுக்கும்  ரேங்க்கிங்கிற்கும் முதன்மையானதாக விளங்குகிறது. உங்கள் வலைதளத்திற்கான உள்ளடக்கம் டெஸ்க்டாப்பிற்கும் மொபைல் சாதனத்திற்கும் தனித்தனியாக இருந்தால்  மொபைலை முதன்மையாகக் கொண்ட அட்டவணைப்படுத்தலை மேம்படுத்த பின்வருவனவற்றை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும்.

  • உங்கள் மொபைல் வலைதளத்தில் டெஸ்க்டாப் வலைதளத்தில் உள்ள அதே உள்ளடக்கம் இருக்க வேண்டும்.
  • உங்கள் வலைதளத்தின் இரண்டு பதிப்புகளிலும் கட்டமைந்த தரவு இருக்க வேண்டும்.
  • வலைதளத்தின் இரண்டு பதிப்புகளிலும் தரவுத்தகவல் இருக்க வேண்டும்.

வலைதள வடிவமைப்பைக் கருத்தில் கொள்ளும்போது பயனர்கள் பொறுமையற்றவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள் – பயனர்கள் வலைதளத்தின் உள்ளடக்கத்தை எளிதாகக் கண்டறிந்து அவர்கள் விரும்பியவற்றைச் செய்யுமாறு அதை ஒழுங்கமைத்திடுங்கள். பயனர்கள் தேடும் உள்ளடக்கத்துடன் அவர்களை எளிதில் இணைக்குமாறு வலைதளத்தின் முகப்புப்பக்கத்தையும் வழிசெலுத்தலையும் கவனத்துடன் வடிவமையுங்கள். பயனர்கள் தங்களுக்குத் தேவையான உள்ளடக்கத்தை விரைவாகக் கண்டுபிடிப்பதை உறுதிசெய்ய வலைதளத் தேடலை வழங்குங்கள். உங்கள் வாடிக்கையாளர்களுக்குப் பிடித்தவை, பிடிக்காதவற்றைப் புரிந்துகொண்டு அவர்கள் தாங்களாகவே வலைதளத்தில் பொருட்களை வாங்குமாறும் நீங்கள் விரும்பும் பிற செயல்களைச் செய்யுமாறும் வடிவமைத்திடுங்கள். வலைதளத்தில் உள்ள படிவங்களை எளிதாகப் பயன்படுத்துமாறு வடிவமைப்பதன் மூலம் பயனர்கள் தடைகளும் சிக்கல்களும் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்துமாறு செய்யுங்கள்.

உங்கள் வலைதளத்தின் பயனர் அனுபவத்தை ‘நன்று’ என்பதில் இருந்து ‘அருமையானது’ என மாற்றுவதற்கு என்ன செய்யலாம் என்பது குறித்து மேலும் அறிய இவற்றைப் பார்க்கவும்: மொபைல் வலைதளங்களை வடிவமைப்பதற்கான சிறந்த நடைமுறைகள்