ஆதாரம்

உங்கள் வலைதளத்தில் விளம்பரங்களைக் காட்டுவதன் மூலம் எவ்வாறு பணம் சம்பாதிப்பது என்று எப்போதாவது எண்ணியிருக்கிறீர்களா? Google AdSenseஸைப் பயன்படுத்திப் பாருங்கள்

ஆதாரப் படம்
தொடங்கும் முறை

விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க எண்ணற்ற வழிகள் உள்ளன. Google மூலம் பணம் சம்பாதிக்க விரும்பினால் உங்கள் வலைதளத்தில் AdSenseஸைப் பயன்படுத்திப் பார்க்குமாறு பரிந்துரைக்கிறோம். அதைத் தொடங்குவதற்கு நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியவை இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

Google AdSense மூலம் பணம் சம்பாதிக்க பல வழிகள் உள்ளன என்பது உங்களுக்குத் தெரியுமா? Google மூலம் பணம் சம்பாதிக்கும் வழிமுறைகளை நீங்கள் தவறவிடுவதற்கான சந்தர்ப்பங்கள் இருக்கக்கூடும், இல்லையா? Google AdSense மூலம் அதிகப்படியாக லாபம் பெற விரும்பினால் AdSenseஸில் பணம் சம்பாதிப்பதற்கான பின்வரும் வழிகளைக் கவனத்துடன் படித்துப் பாருங்கள்.

1. Google AdSense மூலம் லாபம் பெற சரியான இணையதளத்தை உருவாக்குதல்.

குறிப்பிட்ட வகையிலான வலைதளங்கள் மற்றவற்றை விட Google AdSense மூலம் அதிகமான வருவாயை ஈட்டுகின்றன. சிறந்த உள்ளடக்கமும் அதன் மூலம் வரும் அதிகப்படியான டிராஃபிக்கும் AdSense மூலம் பணம் சம்பாதிக்க உங்களுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களாகும்.

உள்ளடக்கத்தைப் பொறுத்தவரை அவற்றில் இரண்டு வகைகள் உள்ளன. உங்கள் வலைதளத்திற்குப் புதிய பயனர்களைத் தினசரி ஈர்க்கும் வகையிலான உள்ளடக்கம் ஒரு வகை, முதன்முறையாக வந்த பயனர்களைத் தினசரி மீண்டும் வருமாறு ஈர்க்கும் உள்ளடக்கம் இன்னொரு வகை. இந்த இரண்டு வகையான உள்ளடக்கத்தையும் ஏறத்தாழ சமமான அளவில் பெற்றிருப்பதே அதிக லாபம் பெறுவதற்கான முழுமையான அணுகுமுறை ஆகும். இதன் மூலம் புதிய டிராஃபிக்கைத் தொடர்ந்து ஈர்க்க முடிவதோடு வலைதளத்திற்கு வரும் புதிய பயனர்களில் பெரும்பாலானோரை திரும்ப வருபவர்களாகவும் மாற்ற முடியும்.

புதிய பயனர்களையும் திரும்ப வரும் பயனர்களையும் கவரும்படியான உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் சிறப்பான வலைதளங்களில் பின்வருபவை அடங்கும்:

இந்த வகை வலைதளங்ககளை மட்டுமே உங்களால் உருவாக்க முடியும் என்பதில்லை, ஆனால் சிறந்த உள்ளடக்கத்தைக் கொண்டு இவற்றை மிக எளிதாக மேம்படுத்தவும் விளம்பரப்படுத்தவும் முடியும், மேலும் உள்ளடக்கத்தைச் சிறந்த முறையில் காட்சிப்படுத்துவதற்கும் Google AdSense விளம்பரம்பங்களுக்கு அதிகக் கிளிக்குகளைப் பெறுவதற்கும் ஏற்ற தளவமைப்பையும் இவற்றின் மூலம் எளிதாக உருவாக்கலாம்.

2. வெவ்வேறு வகையான விளம்பர யூனிட்களைப் பயன்படுத்துதல்.

விளம்பரதாரர்கள் தங்களுக்கான விளம்பரங்களை உருவாக்கும்போது வெவ்வேறு விளம்பர நிறுவனங்களும் வெவ்வேறு வகையான விளம்பரத் தோற்றங்களைப் பயன்படுத்துவார்கள் - Google AdWords. எளிய உரை விளம்பரங்கள், பட விளம்பரங்கள், வீடியோ விளம்பரங்கள் ஆகியவற்றை உருவாக்கும் வசதி அவர்களிடம் இருக்கும்.

வெவ்வேறு வடிவங்களில் விளம்பரங்களை உருவாக்கும் வசதிகள் விளம்பரதாரர்களுக்கு இருப்பதால், உங்கள் வலைதளப் பார்வையாளர்கள் எந்த விளம்பரதாரர்களின் விளம்பரங்களை அதிகமாகக் கிளிக் செய்ய வாய்ப்புள்ளதோ அவர்களின் வெவ்வேறு வகையான விளம்பர யூனிட்களைப் பயன்படுத்தி பார்வையாளர்களுக்கும் விளம்பரங்களுக்கும் இணைப்பை ஏற்படுத்த முயலுங்கள்.

எந்த வகையான விளம்பரங்களைப் பயன்படுத்துவது, அவற்றை எந்தெந்த இடங்களில் வைப்பது என்பதைத் தீர்மானிக்கும்போது அவ்வாறு செய்வதன் மூலம் சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்க முடியுமா என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள். உங்கள் பக்கங்களில் விளம்பரங்களை விட உள்ளடக்கமே எப்போதும் அதிகமாக இருக்க வேண்டும். உங்கள் வலைதளத்திற்கும் அதன் பயனர்களுக்கும் எது சிறந்த பலன்களை அளிக்கும் என்பதை அறியும்பொருட்டு அதில் காட்டப்படும் விளம்பரங்களின் எண்ணிக்கை, விளம்பரக் காட்டுமிடங்கள், விளம்பரத் தோற்றங்கள் ஆகியவற்றைச் சோதனை செய்ய Google Analyticsஸைப் பயன்படுத்துங்கள்.

3. AdSense பிரத்தியேகத் தேடல் விளம்பரங்களைப் பயன்படுத்ததல்.

உங்கள் வலைதளம் அதிகப்படியான உள்ளடக்கத்தைக் கொண்டிருந்தால் (வலைப்பதிவுகள், செய்திகள், மன்றங்கள் போன்றவைகள்) அதில் உள்ளவற்றைத் தேட AdSense பிரத்தியேகத் தேடலை நீங்கள் பயன்படுத்தலாம். உங்கள் வலைதளத்தில் குறிப்பிட்ட உள்ளடக்கத்தைத் தேட பயனரை அனுமதித்து அவருக்கு சிறந்த அனுபவத்தை வழங்குவதோடு வலைதளத்திற்கான தேடல் முடிவுகளுக்கு அருகில் விளம்பரங்களைக் காட்டி Google AdSense மூலம் பெறப்படும் லாபங்களை அதிகரிக்கவும் இது உதவும்.

ஆதாரம் உட்பொதிந்த படம்

கவனத்திற்கு: Google பிரத்தியேகத் தேடலில் இருந்து AdSense பிரத்தியேகத் தேடல் வேறுபட்டதாகும். உங்கள் வலைதளத்திற்கு வரும் பயனர்கள் மூலம் வருவாயை ஈட்டும்பொடுட்டு AdSense பிரத்தியேகத் தேடலைப் பெற நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் .

4. YouTubeல் Google AdSense மூலம் பணம் சம்பாதிக்கத் தொடங்குங்கள்.

Google AdSenseஸை உரை அடிப்படையிலான உள்ளடக்கத்தையோ இலவச ஆன்லைன் கருவிகளையோ உருவாக்குபவர்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. உங்களுக்கு வீடியோக்களை உருவாக்குவதில் மட்டுமே ஆர்வம் உள்ளது எனில், சொந்த YouTube சேனலைத் தொடங்கி அதில் தனித்துவமான வீடியோக்களை வெளியிடத் தொடங்குங்கள்.

உங்கள் சேனலை நிறுவியவுடன் YouTube சேனலின் அம்சங்கள் என்பதற்குச் சென்று ’லாபம் பெறுதல்’ என்பதை இயக்குங்கள். உங்கள் வீடியோக்கள் மூலம் லாபம் பெற YouTube சேனலை AdSense கணக்குடன் இணைப்பதற்கான செயலாக்கம் குறித்த வழிமுறைகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

AdSense கணக்குடன் உங்கள் YouTube சேனலை இணைத்த பிறகு எந்த வீடியோக்கள் மூலம் லாபம் பெறலாம் என்பதையும் வீடியோ பார்வையாளர்களுக்கு எந்த வகையான விளம்பரங்களைக் காட்டலாம் என்பதையும் நீங்கள் தேர்வுசெய்யலாம். இதற்கு வீடியோ நிர்வாகியில் லாபம் பெற விரும்பும் வீடியோவைத் தேர்வுசெய்து அந்த வீடியோவிற்கான விளம்பர அமைப்புகளையும் தேர்ந்தெடுக்கவும்.

ஆதாரம் உட்பொதிந்த படம்

அதன் பிறகு எப்போது வேண்டுமானாலும் எந்த வீடியோக்கள் லாபம் பெறப் பயன்படுத்தப்பட்டுள்ளன (அவற்றுக்கு அடுத்துள்ள பச்சை நிற டாலர் சின்னத்தின் மூலம்) என்பதை வீடியோ நிர்வாகி மூலம் பார்த்து அவற்றுக்கான அமைப்புகளையும் நிர்வகிக்கலாம்.