கனவுகளை நனவாக்க AdSense மூலம் வருவாய் ஈட்டும் நபர்களைக் கண்டு ஊக்கமடையுங்கள்.
இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள 'லட்கர்' எனும் சிறிய கிராமத்தைச் சேர்ந்த கூட்டாளர்கள் இருவர் ஆட்டோமொபைல்கள் மீது அவர்களுக்கு இருந்த அதீத ஆர்வத்தினாலும் கடுமையான உழைப்பாலும் தங்களுடைய ஆன்லைன் ஆட்டோமொபைல் பிசினஸில் வெற்றியடைந்தார்கள்.
அர்ஜென்டீனாவில் தனது வகுப்பு ப்ராஜெக்ட்களைச் சேகரிப்பதற்காக ஒரு மழலையர் பள்ளி ஆசிரியை வலைதளம் ஒன்றை உருவாக்கினார். ஆச்சரியமளிக்கும் விதமாக சுமார் ஐம்பது லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பெற்றோர்களும் அதில் இணைந்துள்ளனர்.
2005ம் ஆண்டிலிருந்து AdSenseஸை wikiHow பயன்படுத்தி வருகிறது. 2 ஊழியர்களைக் கொண்டிருந்த இந்நிறுவனம் AdSense வருவாய் மூலம் இப்போது 24 ஊழியர்களுக்கு வேலை கொடுக்கிறது.
ஜப்பானின் மிகப் பழமையான இந்த ஆங்கில நாளிதழ் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக தினசரிச் செய்திகளை அச்சிட்டு வருகிறது. AdSense மூலம் சம்பாதிக்கும் வருவாயைக் கொண்டு தங்கள் வாசகர்களுக்குத் தொடர்ந்து செய்திச் சேவையை வழங்கி வருகிறது.
ஜப்பானில் உள்ள இந்த ஆன்லைன் டைரக்டரி உள்ளூர் வணிகங்கள் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் தங்களின் சமூகங்களை உருவாக்குவதற்கும் உதவுகிறது.
ஃபிரெஞ்சு உணவு குறித்து எழுதும் வலைப்பதிவாளர் ஒருவர் தனது நிதித்துறைப் பணியை உதறிவிட்டு, மனதுக்குப் பிடித்தபடி உணவுப் பிரியர்களுடன் சமையல் குறிப்புகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
தச்சுப் பொருட்களை எப்படிச் செய்வது என்பதைக் காட்ட, வலைதளம் ஒன்றை லெஸ் கென்னி உருவாக்கினார். AdSense உதவியுடன் அவர் தச்சுத் தொழிலையே தன் முழு நேரப் பணி ஆக்கிக்கொண்டார்.